வீட்டு வரி செலுத்தாததால் ஆத்திரம்.. பள்ளம் தோண்டி பழி வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள்!
கடலூர் அருகே வீட்டு வரி செலுத்தாததால் வீட்டின் முன்பு மாநகராட்சி ஊழியர்கள், பள்ளம் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜ நகரில் செந்தில்குமார் என்பவர் வாடகைக்கு ஒரு வீட்டில் குடி வசித்து வருகிறார். எந்த நிலையில் அவர் இருக்கும் வீட்டிற்கு வரி செலுத்தாமல் அதன் உரிமையாளர் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் வீட்டின் உரிமையாளருக்கு தொடர்ந்து நோட்டீஸ் மேல் நோட்டீஸ் ஆக அனுப்பியுள்ளனர். இதையெல்லாம் சற்றே பொருட்படுத்தாமல் வீட்டின் உரிமையாளர் இழுத்தடித்துக் கொண்டே வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள், நேரடியாக வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அதிகாரிகள் செந்தில்குமாரிடம் வீட்டின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் வாடகைக்கு இருந்த செந்தில் குமார் குடும்பத்தினரிடம் மாநகராட்சி ஊழியர்கள் வரியை கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.4 லட்சம் கோடி கர்நாடகா பட்ஜெட் 2025.. புதிய வரிகள் இல்லை... முக்கிய அம்சங்கள் விவரம்..!
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் குமார் உரிமையாளரே வரியை செலுத்த வேண்டும் நான் எப்படி செலுத்த முடியும் என கேட்டுள்ளார். இதனால் என்ன செய்வது என்று திகைத்த மாநகராட்சி ஊழியர்கள், செந்தில்குமார் வீட்டிற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பெரியதொரு பள்ளம் தோண்டியுள்ளனர்.
இதனால் மனமடைந்த செந்தில்குமார் குடும்பத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விரைவில் இதுகுறித்து உரிய தீர்வு காணப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுடச்சுட வந்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு… அடுத்த நொடியே மேடையில் வெடித்த கே.டி.ஆர்..!