2026இல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.. எடப்பாடியார் முதல்வர் ஆவார்.. மாஜி அமைச்சர் பா.வளர்மதி தாறுமாறு!
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சைவம், வைணவம், பெண்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பும் கேட்டார். இதனிடையே செனனை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும் பல்லாவரத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக உள்ள பொன்முடியின் பேச்சு எவ்வளவு பெரிய அவமானம், அசிங்கம். இந்தப் போராட்டம் வெடித்து 2026-ல் புரட்சி ஏற்பட்டு பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். சகோதரி கூறியவுடனே அமைச்சர் பொன்முடியை, கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டீர்கள்.
தமிழகத்தில் உள்ள பெண்கள் குரல் கொடுக்கிறார்கள் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை? முதல்வரும், துணை முதல்வரும் இதைப்பற்றி பேசாமல் இருப்பது ஏன்? பேசாமல் இருக்க இருக்க புரட்சிதான்வெடிக்கும். நீதிமன்றம் கூறியும் பொன்முடி மீது தமிழக அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்? பொன்முடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கிறாரா? ஏற்றுக்கொள்கிறாரா? ஒத்துக்கொள்கிறாரா? பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அதிமுக -பாஜக கூட்டணி என்பதுவெற்றிக் கூட்டணி,என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல் விவகாரம்.. யாரும் பதிலளிக்காததால் முறைகேடு நிரூபணம்.. எடப்பாடி அட்டாக்!!
இதையும் படிங்க: இபிஎஸ் மைக் ஆஃப்.. அதிமுகவினர் கொந்தளிப்பு.. ஆத்திரத்தில் வெளிநடப்பு..!