×
 

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு...!

வேளாண் பட்ஜெட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஸ்பெஷல் திட்டம் ஒன்றினை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

வேளாண் பட்ஜெட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஸ்பெஷல் திட்டம் ஒன்றினை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- 2026-யில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை துறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விலை பொருட்கள் எளிதில் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய வசதிகள் செய்து தரப்படும் என்றும், உழவர்களிடையே உயிர்மை வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்திட 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடிதூள்... வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மாஸ் திட்டம்... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு...!

உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட செய்யும் உழவர்களை கௌரிப்பதற்காகவும் சிறந்த உயிர்ம உழவருக்கான  “நம்மாழ்வார் விருது” வழங்கும் திட்டம் 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் ஆண்டிலும் இவ்வகையில் மூன்று உழவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரெண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில் இயற்கை விவசாயிகளை கெளரவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளை கண்டு விழிப்புணர்வு பெற்றிட சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: இவர்களுக்கு 75% மானியம்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share