இவர்களுக்கு 75% மானியம்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு...!
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் குறித்த அறிவிப்புகளை வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் குறித்த அறிவிப்புகளை வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், “மக்கள் நலமும் நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. உடல் நலம் பேண ஊட்டச்சத்து மிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் இந்த விலைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025 27 ஆம் ஆண்டில் ரூபாய் 125 கோடி மத்திய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” என்றார்.
காய்கறிகள் விதைத் தொகுப்பு:
காய்கறிகள் பழங்களின் தினசரி தேவை சராசரியாக ஒரு நபருக்கு 400 கிராம் அகும். ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை மற்றும் கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயிகளுக்கு இன்பமயமான செய்தி... வேளாண் பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா?
பழசெடிகள் தொகுப்பு:
நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பலன் அளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்புகள் 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் காய்கறிகளின் தேவை ஏற்ப அவற்றின் பரப்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்திரி, பச்சை மிளகாய், வெண்டை, கீரை போன்ற முக்கிய காய்கறி பயிர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படும். இந்த பரப்பு விரிவாக்கம் பெருமளவு சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு, சென்னைக்கான காய்கறி தேவை நிறைவு செய்யப்படும் என்றா
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.... வேளாண் பட்ஜெட்டில் லட்ச லட்சமாய் பரிசுமழை...!