'மாப்ளேய்…' சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை உறவு கொண்டாடிய அதிமுக எம்.எல்.ஏ..!
எதிரும், புதிருமாக அரசிலில் இருக்கும் கே.சி.கருபண்ணன், சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என்று உரிமையோடு அழைத்திருப்பது, கட்சியையும் தாண்டி அவர்களிடத்தில் நட்பு இருப்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன், ''தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சோலார் பேனல்களை நிறைய நிறுவுகிறார்கள். அதில் மின்சார அளவு 100 கிலோவாட் இருந்தால் 100 கிலோவாட் மட்டும்தான் நாம் அனுமதிக்கிறோம். வெயில் குறைவாக இருக்கிற நேரத்தில் மின்சாரம் போதியதாகக் கிடைப்பதில்லை.
ஆகையால் 100 கிலோவாட்டில் இருந்து 120 கிலோவாட்டுக்கு அனுமதி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மின்சாரத் துறைக்கு எந்த இழப்பும் இல்லை என்பது 'மாப்பிள்ளைக்கு தெரியும்' (செந்தில் பாலாஜிக்கு) சாரி... சாரி... அது வாயில் இருந்து வந்துவிட்டது. பேசிப்பேசி வாயில் வந்து விட்டது... மன்னிக்கவும். அதனால் அவர்களுக்கு தெரியும். (சட்டப்பேரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் குபீரென சிரித்தனர்) இந்த 100 கிலோ வாட்டில் இருந்து 110 அல்லது 120 கிலோவாட் கொடுத்தால் வசதியாக இருக்கும். அதனால் அதற்கு கொஞ்சம் அனுமதி கொடுக்க வேண்டும்.
எச்டி லைனில் வந்து அந்த சோலார் பேனல் விரைவில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதனால் கொஞ்சம் சீக்கிரம் அனுமதி கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: விளம்பரத்திலேயே ஆட்சி நடத்துகிறது திமுக.. ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு..!
அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, '' தனியார் சோலார் பேனல் அமைப்பது குறித்தும், சோலார் பேனல் இணைப்புகள் கொடுப்பது குறித்தும் மாண்புமிகு உறுப்பினர் எடுத்துச் சொல்லி இருக்கிறார். மிக விரைவாக அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அதனுடைய விவரங்கள் குறித்து கூடுதலாக எடுத்துச் சொல்லி துறையின் அதிகாரிகாளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறினார்.
2021 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க வேட்பாளராக பவானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கால் கே.சி.கருப்பண்ணனின் கை ஓங்கி இருப்பதாகவும், இவரால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கும் மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எதிரும், புதிருமாக அரசிலில் இருக்கும் கே.சி.கருபண்ணன், சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என்று உரிமையோடு அழைத்திருப்பது, கட்சியையும் தாண்டி அவர்களிடத்தில் நட்பு இருப்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...