அமித் ஷா கேட்ட 2 கேள்விதான்… பெட்டிப் பாம்பாய் அடங்கிப்போன எடப்பாடியார்..!
அப்போது கூட பாஜக கட்சியுடன்தான் ஓபிஎஸ் நின்றார். தங்களை நம்பி வந்த ஓ.பி.எஸை நட்டாற்றில் விடுவதற்கு பாஜகவுக்கு மணமில்லை.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆகையால் இன்னும் ஆறு மாதம் கழித்து கூட்டணி பற்றி பேசுவேன் என எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக சொல்லிக் கொண்டே வந்தார். இவ்வளவு உறுதியான மனம் படைத்த அவரையே உள்துறை அமித் ஷா அலேக்காக தூக்கி விட்டார். இறுதிவரை பிடிகொடுக்காத எடப்பாடி பழனிசாமி பிறகு பாஜகவின் இழுவைக்கு இறங்கி வந்தது எப்படி? என பலரும் கேட்கின்றனர்.
கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஓ.பி.எஸ் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே உறுதியா சொல்லி வருகிறார். ஆனால் அந்த கூட்டணியை விட்டு வெளியேறிய எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தலை தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சந்தித்தார். அப்போது கூட பாஜக கட்சியுடன்தான் ஓபிஎஸ் நின்றார். தங்களை நம்பி வந்த ஓ.பி.எஸை நட்டாற்றில் விடுவதற்கு பாஜகவுக்கு மணமில்லை.
இதனால எப்படியாவது ஓ.பி.எஸை அதிமுகவில் சேர்த்து வைக்க முயற்சிகளை டெல்லி மேற்கொண்டது. ஆனால் அதுமட்டும் நடக்கவே நடக்காது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். இதனால கோபத்தின் உச்சத்துக்கே சென்ற உள்துறை அமித் ஷா, ஊழல் வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை எடுத்து சொல்லி இருக்கிறார். இதனால் ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்கிறோம் ஒருங்கிணைந்த அதிமுகவில் வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனை கை கழுவுகிறதா பாஜக.? எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வியூகம்!!
அதோடு இரட்டை இலை சின்னம் வேண்டாமா? என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார் அமித் ஷா. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு ஒன்றும் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. இரட்டை இலை இல்லை என்றால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை செய்திருக்கிறார்.
முடிவில் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடைசி கபட நாடகத்தை பாஜக மேலிடம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இரட்டை இலை சின்னத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் எடப்பாடி பழனிசாமி செல்வார். அதுதான் தற்போதைய கூட்டணி. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் சின்னம் கைக்கு வந்தவுடன் அவரது அரசியல் ஆட்டம் தெரிய வரும் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.தரப்பினர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!