மஹா சிவராத்திரியை ஒட்டி களைக்கட்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்!
அருள்மிகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச்சிறப்பையும் பெற்று விளங்குகிறது. எப்படிப்பட்ட துயரங்களை சந்தித்தாலும் அருணாச்சலேஸ்வரரை கண்டு, கிரிவலம் சென்றால் அனைத்தும் தீர்ந்து நல்வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பிரம்மாவும் திருமாலும் சிவபெருமானின் அடி முடியை காண முடியாமல் திகைத்து போக, அவர் லிங்கோத்பவராக அருள் பாலித்த சிறப்பு நாளே மகா சிவராத்திரி ஆக வழிப்படப்படுகிறது என புராணக் கதைகளின் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடிஞ்சா அங்கப்போய் தொட்டுப் பார்... திமுகவினருக்கு நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!
இதனைப் புலப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறைக்குப் பின்புறம் லிங்கோத்பவர் திருவுருவம் அமைய பெற்றுள்ளது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நான்கு கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. நாளை காலை 6:00 மணி முதல் 1 மணி வரை லட்சார்ச்சனை மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்பட உள்ளன. நள்ளிரவு 12 மணி அளவில் கருவறைக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வருகை தருவார்கள். மேலும் பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பணிகளையும் கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!