×
 

கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை பவனி! ஓசான்னா ஒலிக்க வழிபாடு...

ஈஸ்டர் பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை கோவேரி கழுதையின் மீது அமர வைத்து அரசராக பாவித்து, ஊர்வலமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் குருத்தோலை திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!

இந்த நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடைபெறுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்த நிலையில் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக வருவார்கள். மேலும், இயேசு உயிர்த்த நாளின் வருகையை வெளிக்காட்டும் விதமாக ஓசான்னா பாடலை பாடி வழிபாடு மேற்கொள்வார்கள்.

குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும், நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திலும் அதிக அளவிலான கிறிஸ்தவர்கள் கூடி குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பார்கள். தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஏப்ரல் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், கஷ்டங்கள் குறித்த நிகழ்ச்சிகளும், 17 ஆம் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடும், 18 ஆம் தேதி புனித வெள்ளியாகவும் அனுசரிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share