ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!
கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீர்கள் என்பது ஆ.ராசாவின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட ஆ.ராசா, திமுகவினர் கரை வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்காதீர்கள் , திமுக கூட்டத்திற்கு வரும் பொழுது பொட்டை அழித்து விடுங்கள் என்று பேசி இருந்தார்.
நல்லா சாமி கும்பிடுங்க, அம்மா, அப்பா பொட்டு வெச்சா வெச்சுக்கோங்க. ஆனால் திமுக வேட்டி கட்டினால் அதை அழித்துவிடுங்கள். கையில் கயிறு கட்டி, நெற்றியில் பொட்டு வைத்தால், யார் சங்கி? யார் நாம்? என தெரியாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: விஜய் ஒரு குழந்தை..! நாங்க பல ரேஸ்ல ஜெயிச்சவங்க.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி தாக்கு..!
இந்த நிலையில் ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஆ.ராசா பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். தன் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தவறு என்று தெரியும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நியாயத்தின் ஆட்சி இது என தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி செய்து கொண்டிருப்பதால் மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் என்றும் இதனால் இயக்கத்திற்கும், தலைமைக்கும் அவப்பெயர் ஏற்படுவதில்லை எனவும் கூறினார். மேலும் ஆ.ராசா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் எங்கள் தலைவரின் கருத்து அதுவல்ல எனவும் தெரிவித்தார்.
பாஜக தலைமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எப்படி பட்ட தலைவர்கள் வந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்ளும் இரும்பு மனிதராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக கூறினார்.களத்தில் நின்று களமாடும் போது, ஒரு அண்ணாமலை இல்லை ஒரு ஊர் அண்ணாமலை வந்தாலும் சந்திக்க தயார் என கூறினார்.
இதையும் படிங்க: பக்தர்கள் இப்படி தான் இறந்தாங்க.. காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!