×
 

‘ஹோலி’யன்று முஸ்லிம் ஆண்கள் ‘தார்பாலின் ஹிஜாப்’ அணியலாமே.. பாஜக எம்எல்ஏ கிண்டல் பேச்சு..!

ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் ஆண்கள், ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் அவசவுகரியங்களை தவிர்க்க தார்பாலினால் தயாரிக்கப்பட்ட ஹிஜாப்களை அணிந்து கொள்ளலாம் என்று பாஜக எம்எல்ஏ ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஹோலி பண்டிகை என்பது ரமலான் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது. வண்ணங்களின் திருவிழா எனச் சொல்லப்படும் ஹோலியன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைத் தூவி தங்களின் மனகசப்புகளை மறந்து, மகிழ்ச்சியைக் கொண்டாடுவர்.

இந்நிலையில் ரமலான் மாதத்தின் வெள்ளிக்கிழமையன்று ஹோலி பண்டிகை வருவதால், அன்று முஸ்லிம்கள் செய்யும் தொழுகையை பிற்பகலில் தாமதமாக வைத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர். இருப்பினும் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் ஹோலி கொண்டாடத்தின்போது முஸ்லிம்கள் தொழுகையும் நடப்பதால் சிக்கல் வராமல் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உபி அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராஜ் சிங் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் “ஹோலி பண்டிகையன்று எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க அரசு விழிப்புடன் இருக்கிறது. வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்தாலும் சமாதானம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தூக்கி எறியப்படுவார்கள்.. சுவேந்து அதிகாரி பேச்சால் சர்ச்சை..!

இதுபோன்று ஹோலி பண்டிகையன்று தொழுகை நடத்த முடியாது, வண்ணப்பொடிகள் வரும் என பெண்கள் போன்று பேசும் முஸ்லிம் ஆண்கள், ஹிஜாப் அணிந்து கொள்ளுங்கள், மசூதிகளை தார்பாலின் கொண்டு மூடுங்கள், தார்பாலினால் செய்யப்பட்ட ஹிஜாப்பை ஆண்களும் அணிந்து கொண்டு செல்லுங்கள். இப்படி சென்றால் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது, தொழுகையும் எளிதாக நடத்தலாம்.

ஹோலி பண்டிகை என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை. குறிப்பிட்ட பகுதிக்குள்தான் வண்ணப்பொடிகளை வீச வேண்டும் என ஹோலி கொண்டாடுவோரிடம் கேட்க முடியாது. சத்ய யுகத்தில் இருந்து ஹோலி கொண்டாப்பட்டுவருகிறது, ஆண்டுக்கு ஒருமுறைதான் ஹோலி வரும். ஆதலால் மசூதிகளை தார்பாலின் கொண்டு மூடுங்கள், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியுங்கள், அல்லது தார்பாலினால் செய்யப்பட்ட ஹிஜாப் அணியுங்கள். உங்கள் குல்லா ஈரமாகாது. ஆண்களும் தார்பாலினால் செய்யப்பட்ட ஹிஜாப்பை அணியுங்கள். இந்துக்கள் யாரும் அசவுகரியப்டமாட்டார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஏற்கெனவே சம்பல் நகரில் காவல் துணை ஆணையர் முஸ்லிம்களை வீட்டுக்குள் இருக்க வேண்டும், வெள்ளிக்கிழமை ஆண்டுக்கு 52 முறை வருகிறது, ஹோலி ஒருமுறைதான் வருகிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி, கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்போது பாஜக எம்எல்ஏவும் அதபோன்று பேசியுள்ளார்.

சம்பல் போலீஸ் அதிகாரி பேசிய பேச்சுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வீட்டின் அருகே இருக்கும் மசூதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தொழுகை நடத்துங்கள், வெளியே அதிக தொலைவு செல்ல வேண்டாம் என்று லக்னோ தலைமைப்பள்ளிவாசலின் இமாம் தெரிவித்துள்ளார். சம்பல் நகரிலும் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 2.30 மணிக்கு மேல் நடத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஹோலி பண்டிகை அமைதியாகவும், ஒற்றுமையாகவும் கொண்டாட முஸ்லிம்கள் அனைத்து ஒத்துழைப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும என அலிகார் பள்ளியின் தலைமை இமாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹோலி பண்டிகையன்று, ரமலான் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையும் வருவதால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பண்டிகை கொண்டாட போலீஸார் தீவிர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். உ.பியில் பல்வேறு நகரங்களில் ஹோலி-வெள்ளிக்கிழமை தொழுகை சர்ச்சை வெடித்துள்ளது.


 

 
 

இதையும் படிங்க: இந்தியாவில் இதுதான் முதன் முறை..! மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share