×
 

தம்பி விஜய், ரொம்பவே குழப்பிக் கொள்கிறார்… சீமான் சொன்ன அந்த ரகசியம்..!

தமிழ், தமிழர் என்று பேசியதை எல்லாம் சட்டமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள் என்று சொன்னால், இது தமிழ்நாடு அரசு தானா? தமிழர்களுக்கான அவை தானா?

''எனக்கும், விஜய்க்கும் கொள்கை முரண்தான். விஜய் ஒரு கொள்கையை எடுத்து செல்கிறார். அந்த கொள்கையை எதிர்க்க வேண்டிய தேவையாக இருக்கிறது, எதிர்க்கிறோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கி உள்ளார்.

சிவகங்கையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''எனக்கும், விஜய்க்கும் கொள்கை முரண்தான்.விஜய் ஒரு கொள்கையை எடுத்து செல்கிறார். அந்த கொள்கையை எதிர்க்க வேண்டிய தேவையாக இருக்கிறது, எதிர்க்கிறோம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா? திராவிடத்திற்கு எதிரானதுதான் தமிழ் தேசியமே.

என் மொழியை வைத்து கொண்டு பிழைக்கிறது திராவிடம். அது தமிழ் தமிழ்... என்று பேசி தமிழை அழிக்கும். நாங்கள் எங்கள் மொழியை காக்க போராடுவோம். அது ஒப்புக்கு அழும், நாங்கள் உளமாற அழுவோம். கட்சத் தீவை எடுத்துக் கொண்டு போகும், எடுக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கும். பதவிக்காக திராவிடம் அதை மீட்டே ஆவோம் எனச் சொல்லும். அது எங்கள் வாழ்வுரிமை என்று போராடுவது தமிழ் தேசியம்.

இதையும் படிங்க: நடிகையின் இடுப்பை கிள்ளிய விஜய்.. அண்ணாமலையின் விமர்சனத்துக்கு சீமான் கொடுத்த ரியாக்சன்..!

இரண்டுக்கும் நிறைய தூரம் இருக்கிறது. உங்களுக்கு விளங்குகிறதா? அவர்களுக்கு ஈழம் ஒரு பிரச்சினை. மீனவர் படுகொலை ஒரு பிரச்சனை. அது எங்களுக்கு பிரச்சனை இல்லை, எங்களுக்கு அது வாழ்வுரிமை. எங்களுக்கு அது கனவு. ஒவ்வொன்றையும் நீங்கள் பட்டியலிட்டால் அது பெரிய மேடைப்பேச்சாக ஆகிவிடும். ஆகையால், தம்பி விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என்று சொல்லக்கூடாது.

தமிழ், தமிழர் என்று பேசியதை எல்லாம் சட்டமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள் என்று சொன்னால், இது தமிழ்நாடு அரசு தானா? தமிழர்களுக்கான அவை தானா? என்கிற சந்தேகம் வருகிறது. சட்டசபையில் மதிப்புமிக்க கட்சித் தலைவர்களை ஏன் பிரித்து பிரித்து உட்கார வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. வேல்முருகனும் திமுக கூட்டணியில் ஒரே கட்சியில் இருப்பவர்தான். அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

எங்கள் அண்ணன் திருமாவளவன் துணை முதல்வரை சந்திக்கும்போது பக்கத்தில்கூட உட்காரவில்லை. எங்கள் அண்ணன் திருமாவளவன் அங்கே ஒரு ஓரம் உட்கார்ந்து இருக்கிறார். உதயநிதி இந்த ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார். இதைத்தான் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share