×
 

நாளை பட்ஜெட் தாக்கல் - என்னவெல்லாம் அறிவிக்கப்படலாம்?

தமிழக சட்டப்பேரவையில் நாளை இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2025-2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

அப்போது கடந்த ஆண்டு தமிழக அரசின் வருவாய், வரவு செலவு கணக்குகள், பெற்ற கடன்கள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிடுகிறார். இதேபோல், 2025ம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட செலவுகள், அதன் வருவாய் வரவுகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. 

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால் இதில் மக்களை கவரும் விதமாக பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து 15ம் தேதி வேளாண் துறை சார்ந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தால்ல செய்ய உள்ளார்.

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு... தீயாய் களத்தில் இறங்கிய தங்கம் தென்னரசு...! 

17ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்கள் வரை நடைபெற உள்ள விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். 

இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் விரிவாக்கம் செயப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமா?, ஜாக்டோ ஜியோ கோரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா, என்றும் எதிர்பார்ப்படுகிறது. இதற்கிடையே இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இனி எல்லாமே தமிழ் தான்... கடைகளுக்கு பறந்த நோட்டீஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share