இனி எல்லாமே தமிழ் தான்... கடைகளுக்கு பறந்த நோட்டீஸ்!!
சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில் இதுவரை தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை கடைகளுக்கு வந்த புது சிக்கல்… மாநகராட்சியின் அதிரடி முடிவு!!
இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர்கள் குறிப்பிட்ட கடைகளுக்கு அறிவுறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான கடைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் ஆய்வு செய்து அபராதம் அல்லது நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கை சர்ச்சையாகி வரும் நிலையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கூறி தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்களும் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தி பேசுபவர்களே இங்க தான் வேலை கேட்டு வராங்க... திருமா பதிலடி!!
சென்னையில் உள்ள 70 ஆயிரம் கடைகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் 7 நாட்களுக்குள் பெயர் பலகை தமிழில் இல்லை என்றால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.