×
 

தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்கு..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகையின் போது போக்குவரத்துக்கு இடையூறு செய்யப்பட்டதாக இரண்டு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜயை காண காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

விஜய் கண்டதும் ஆர்ப்பரிப்பில் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன் ஆரவாரம் செய்தனர். திறந்த வெளி வாகனத்தில் விஜய் பயணம் செய்த போது வழி நெடுகிலும் தொண்டர்கள் குவிந்ததுடன் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.. ஸ்தம்பித்தது கோவை..!

இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் விமான நிலையத்தில் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கார், பைக் உள்ளிட்ட 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அபராதமும் விதித்துள்ளனர். 

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வரும் விஜய்... திடீர் கோவை பயணம் - வெளியானது பரபரப்பு காரணம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share