ரயில் மூலம் திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்.. உதவிக்கரம் நீட்டிய உதயநிதி..
வாரணாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்ற வீரர்கள் கூட்ட நெரிசல் காரணமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அவர்களை விமான மூலம் சென்னை அழைத்து வந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தென்னிந்திய கிரிக்கெட் அணி சார்பில் 11 பேர் கொண்ட குழு வாரணாசி சென்றனர். இந்த குழுவில் ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி முடிவடைந்தும் சென்னை திரும்புவதற்காக வாரணாசியில் இருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் விலை முன்பதிவு செய்திருந்தனர். அப்போது ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையம் சென்ற போது அங்கு மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட கூட்டம் அலைமோதியது.
அதனால் அவர்கள் முன்பதிவு செய்த இருக்கைகள் அனைத்தையும் பலர் ஆக்கிரமித்துக் கொண்டதால் கிரிக்கெட் வீரர்கள் இருக்கைகள் இன்றி தவித்தனர். தொடர்ந்து இது இதனை வீடியோவாக பதிவு செய்த வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் தங்களை பத்திரமாக மீட்க கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: ‘டிஜிட்டல் ஸ்நானமாம்’! எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க! கும்பமேளாவில் இப்படியும் மோசடி
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீரர்களை விமான மூலம் சென்னைக்கு அழைத்துவர உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பத்திரமாக சென்னை வந்தடைந்த வீரர்களை பிழை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் பர்ஸை தொலைத்தவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதன் ரகசியம் என்ன?