‘டிஜிட்டல் ஸ்நானமாம்’! எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க! கும்பமேளாவில் இப்படியும் மோசடி
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக உலகின் பல இடங்களில் இருந்து இந்துக்கள் குவிந்து வரும் நிலையில் டிஜிட்டல் ஸ்நானம் என்ற பெயரில் நவீன மோசடி கிளம்பியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை,யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள். கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 55.50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த மகா கும்பமேளா காலத்தில் இங்குள்ள திரிவேணி சங்கத்தில் புனித நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள், ரயில்கள், கார், பேருந்துகளில் பிரயாக்ராஜ் வந்தவாறு இருக்கிறார்கள்.
இங்கு வரும் அனைவரின் நோக்கம் இங்கு வந்து நதியில் புனித நீராட வேண்டும் இல்லாவிட்டால் 144 ஆண்டுகளுக்குப்பின்புதான் இந்த மகா கும்பமேளாவை சந்திக்க நேரிடும் என்பதால் கூட்டம் அலைபாய்கிறது. இந்த கூட்டத்தையும், புனித நீராட வேண்டும் என்ற மக்களின் தீரா வேட்கையையை புத்திசாலியான ஒருவர் பயன்படுத்தியுள்ளார். அதாவது பிரயாக்ராஜ் நகருக்கு நேரடியாக வந்து புனிதநீராடமுடியாத சூழலில் இருப்போர் “டிஜிட்டல் ஸ்நானம்” செய்யலாம் என அறிவித்துள்ளார். அதாவது பிரயாக்ராஜ் நகருக்கு நேரடியாக வர முடியாமல், புனித நிராட முடியாமல் இருப்போர் தங்கள் புகைப்படங்களை, அந்த நபருக்கு வாட்ஸ் அப் செய்ய வேண்டும். அந்த புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து, அந்த புகைப்படங்களை திரிவேணி சங்கத்தில் மூழ்கவைத்து வீடியோ எடுத்து புகைப்படம் அனுப்பிவயருக்கு அனுப்புவார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் பர்ஸை தொலைத்தவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதன் ரகசியம் என்ன?
அதாவது நேரடியாக வரமுடியாதவர்கள், புகைப்படத்தை மட்டும் வழங்கினால் புகைப்படத்தை நிதி நீரில் மூழ்கி எடுத்தால் டிஜிட்டல் ஸ்நானம். இந்த டிஜிட்டல் ஸ்நானத்துக்கு ஒரு புகைப்படம் ஒன்றுக்கு ரூ.1100 கட்டணாக வசூலிக்கிறார். இதுபோன்ற மோசடி குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் எச்சரித்துள்ளனர். யாரும் டிஜிட்டல் ஸ்நானம் என்று கூறுவோருக்கு பணம்அனுப்பாதீர்கள் என்று எச்சரித்துள்ளனர். இன்னும் சிலர் டிஜிட்டல் ஸ்நானம் செயவரின் புகைப்படத்தை பதிவிட்டு “ சனாதன தர்மத்தையே கேலிக்கூத்தாக்குகிறீர்கள், இதற்கு உங்களுக்க வெட்கமாக இல்லையா” எனச் சாடியுள்ளார். மற்றொரு பக்தர் எக்ஸ் தளத்தில் “ சீனாவின் டீப்சீக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இப்போதுதான் டீப்ஸ்நானத்தை பற்றி அறிகிறோம்.ராமர் பெயரைச் சொல்லி கொள்ளை நடக்கிறது, முடிந்தால் கொள்ளையடி கடைசியில் உன் உயிர் போகும்போது நீ வருத்தப்படுவாய்” என கடுமையாகச் சாடியுள்ளனர். கும்பமேளாவைப் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வை வர்த்தகமயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன, மக்களும் இதை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்று நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.
தொழிலதிபர் ஹர்ஸ் கோயங்கா என்பவர் கும்பமேளாவில் சுவரொட்டி அடித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் புதிய உத்தியில் விளம்பரம் செய்து வருகிறார். அது வேறொன்றுமில்லை, மக்கள் தங்கள் செய்த பாவத்துக்கு வாட்ஸ்அப்பில் பாவமன்னிப்புக் கோரலாம் என்று விளம்பரம் செய்துள்ளதும் மக்களை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரயாக்ராஜ் கங்கை நதியில் கலந்துள்ள ஃபாகல் பாக்டீரியா? மனிதர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?