×
 

ஊட்டி, கொடைக்கானலில் இந்த பொருட்களுக்கு தடை.. மீறினால்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் குளிர்ந்த பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையும் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு அங்கேயே வீசி செல்வதாக புகார் எழுந்தது.

இதை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்தது. இருந்தபோதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் இருந்துதான் வருகிறது. இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊட்டி மக்களுக்கு செம டிரீட்.. நீலகிரியில் ஒரு மினி டைடல் பார்க்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரமணிய கவுசிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதனை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தடை விதித்துள்ள 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தியர் மலை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி எடுத்துச் சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். நீலகிரியில் கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பொருட்களை மக்கும் பொருட்களில் வைத்து வழங்க வேண்டும். குடிநீர் பாட்டில்கள், பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம். பொது இடங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் விதிக்கப்பட்ட வாகன கட்டுப்பாடு.. எல்லோரையும் பாதிக்கும் உத்தரவு தேவையா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share