நிதி முறைகேடு வழக்கு..! பெரியார் பல்கலை. துணை வேந்தருக்கு எச்சரிக்கை..!
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் முன்அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் பெயரில் தனி அமைப்பை அரசு நிதியில் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் ராம்கணேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, முறைகேடு புகார், வன்கொடுமை வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து காவல்துறை முறையிட்டது.
இதையும் படிங்க: ஐ.பெரியசாமிக்கு செக்..! அடுத்த விக்கெட்டா? அலறும் திமுக..!
அப்போது, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால் கைது செய்து புலன் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!