வலியால் துடித்த தாய்..! வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்..!
சீனாவில் பிரசவ வலியால் துடித்த தன் தாய் 13 வயது சிறுவன் பிரசவம் பார்த்த நிகழ்வு ஆச்சரியமடைய செய்துள்ளது.
மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்புதான். இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்று சமூக வலைத்தளங்களை பார்த்து எடுக்கும் முயற்சிகள் உயிரையே எடுத்துவிடும். இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், சீனாவில் வலியால் துடித்த தன் தாய்க்கு வேறு வழியின்றி 13 வயது சிறுவன் பிரசவம் பார்த்து உள்ளான். ஃபுஜியன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. 37 வார கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு பனிக்குடம் உடைந்துள்ளது. இதனால் 13 வயது சிறுவன் தன் தாய் வலியால் துடித்ததை கண்டு அவசர சிகிச்சை மையத்தை அழைத்து தகவல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சீனாவின் சட்டவிரோத போதைப்பொருள்… இந்தியா மீது பழிபோடும் டிரம்ப் நிர்வாகம்..!
ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூன் என்பவரின் ஆலோசனை படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரம் கழித்து மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால்,வீட்டில் பிரசவம் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர். குழந்தை வெளியே வருவதற்கு முன்பே பனிக்குடத்தின் நீர் முழுவதும் வெளியேறிவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறும் ஆபத்து ஏற்படலாம். தாயின் உறுப்பைவிடக் குழந்தையின் தலை பெரிதாக இருந்தால், குழந்தையை வெளியே எடுக்க முடியாது. இதற்கு மருத்துவரின் உதவி கட்டாயம் தேவை என்று கூறப்படுகிறது.
பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்தப் போக்கினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே முறையற்ற வீட்டு பிரசவம் ஆபத்து தான் என்கிறது மருத்துவ வட்டாரங்கள்.
இதையும் படிங்க: இரும்பிலே இருதயம் முளைக்குதோ..! ரோபோவுடன் டேட்டிங் போகும் இளைஞர்.. சீனாவில் வினோதம்..