மீண்டும் தலைதூக்கியுள்ள சிஐடியு - சாம்சங் பிரச்னை.. தமிழக அரசுக்கு எழுந்த கூடுதல் சங்கடம்..!
நிறுவன விதிமுறைகளை அனைத்து ஊழியர்களும் கட்டாய முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் நீரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்திய நிறுவன ஊழியர்கள் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கம் அமைத்தனர். இதனைத் தொடர்ந்து மார்க் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு அமைப்புடன் இணைந்து இந்த சங்கம் செயல்பட்டு வந்தது.
ஆனால் இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் நிறுவனம் ஏற்க மறுப்பு தெரிவித்தது. இதனைக் கண்டித்து சாம்சங் நிறுவன ஊழியர்கள் சுமார் 37 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் நிறுவனம் மற்றும் ஊழியர்களிடம் பல தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அனைத்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது. இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைக்கு நகர்த்திய அரசு, பெரும் பாடுபட்டு ஒரு வேலையாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனை அடுத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளாக செயல்பட்ட மூவரை சாம்சங் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதனை கண்டித்து நிறுவன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், இதனை திரும்ப பெற வலியுறுத்தி சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நிழல் உலக தாதாவின் கதையை முடித்தது எப்படி? சினிமாவை மிஞ்சும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு..!
இதனால் மீண்டும் நேற்று மாலை தொழிலாளர்கள் சங்கத்திற்கும் சாம்சங் நிர்வாகத்திற்கும் இடையே தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையில், அவர்கள் மூவரும் மட்டுமின்றி நிறுவன விதிகளை மீறியதாக, மேலும் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதை எடுத்து தமிழகத்தின் அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து சாம்சங் ஷோரூம்களையும் முற்றுகையிட போவதாகவும் போராட்டத்தை தீவிர படுத்திய சிஐடியு தொழிற்சங்கத்தினர் சூழரைட்டு போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்து samsung இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனைக்கு தீர்வு காண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட சில ஊழியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் கொள்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதனை மீறும் ஊழியர்கள் மீது கண்டிப்பான முறையில் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்போது அப்பா… இப்போது மகன்..! டெல்லி முதல்வர் பதவியை தட்டிப்பறித்த பாஜகவின் 2 பெண்கள்..!