வருகின்ற சனிக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பொதுவாக மாதத்தின் கடைசி பணி நாள் அன்று ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப் படுவதில்லை. இமாதத்தின் கடைசி பணி நாளான 29ஆம் தேதி அன்று சனிக்கிழமையாக அமைகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு..!
எனவே இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலை கடை பொது விடுமுறை தினங்களாக வருவதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29ஆம் தேதி அதாவது சனிக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை 29 ஆம் தேதி அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!