சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயற்சி.. கடுங்காவல் சிறை தண்டனை விதித்த நீதிபதி..
தூத்துக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்த இளைஞருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்ட சந்தோஷ் மீது குழந்தை கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தோஷை முக்கிய குற்றவாளி என உத்தரவிட்டார். மேலும் குழந்தை கடத்த முயன்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளும் போக்சோ குற்றத்திற்காக 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, அதனை மொத்தமாக ஐந்து ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதோடு, 7000 ரூபாய் அபராதம் வித்தும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இளம்பென்னுக்கு பாலியல் தொந்தரவு.. மருத்துவர் கைது..!
முன்னதாக இந்த வழக்கு விசாரணையை சிறப்பாக கையாண்ட அப்போதைய எட்டயபுரம் ஆய்வாளர் இளவரசு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் ஆய்வாளர் விஜயலட்சுமி, பாதிக்கப்பட்டோரின் தரப்பில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி மற்றும் விசாரணைக்கு உறுதுணையாக இருந்த காவலர் சங்கரகோமதி ஆகியோருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!