×
 

3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!

தஞ்சாவூர் அருகில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோபில் கைது செய்தனர்.

தஞ்சை அடுத்த கிராமப் பகுதியில் மூன்றாவது ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மாணவியை பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

 பின்னர் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அதே பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு மாணவியை அந்த இளைஞர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் இளைஞர் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த இளைஞர் மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து மாணவியை அவரது பெற்றோரிடம் வலி தாங்க முடியாமல் கூறவே, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தது மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க: POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!

இது குறித்து மாணவியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்தனர்.

அப்போது அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிவராத்திரியில் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சரின் மகள்..! தோழிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசேனா குண்டர் கைது

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share