ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..!
அமெரிக்க அரசால் தேடப்பட்ட கிரிப்டோகரன்சி மோசடியாளர் கேரள திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் 9600 கோடி டாலர் (ரூ.8.36 லட்சம் கோடி) கிரிப்டோகரன்சி மோசடி செய்து தேடப்பட்டு வந்த லிதுனியா நாட்டைச் சேர்ந்தவரை கேரள போலீஸார் நேற்று கைது செய்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து லிதுனியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அலெக்சேஜ் பெசிகோவை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் அலெக்சேஜ் பெசிகோவ் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், சதித்திட்டம், தடைகளை மீறியது, கிரிப்டோகரன்சி மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுகையில் இருந்தது. பல ஆயிரம் கோடி டாலர்களை மோசடி செய்ததால் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசால் அலெக்சேஜ் பெசிகோ அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு...நடிகைகளிடம் விசாரணை? - வதந்தி பரப்பினால் நடவடிக்கை தமன்னா... புதுச்சேரி போலீஸ் ஆலோசனை
அமெரிக்க அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அதிகாரிகள் விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது அலெக்சேஜ் போலீஸாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட அலெக்சேஜ் “காரன்டெக்ஸ்” எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்தும், கிரிமினல் செயல்கள் செய்தும், கணினிகளை ஹேக்கிங் செய்வது, போதைப்பொருட்கள் வாங்க பரிமாற்றம் செய்வது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுவந்ததாக அமெரிக்க போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள்.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அளித்த ஆவணங்களில், பெசிகோவ் கடந்த 6 ஆண்டுகளாக காரன்டெக்ஸ் நிறுவனத்தை நடத்தி, பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இந்த நிறுவனத்தை நடத்திய வகையில் 96ஆயிரம் கோடி டாலர்களை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார், கிரிமினல் அமைப்புகளான தீவிரவாத அமைப்புகளுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இந்த கிரிப்டோகரன்சிகளை பரிமாற்றம் செய்வதன் மூலம் லட்சக்கணக்கிலான டாலர்களுக்கு பெசிகோவ் ஆதாயம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தீவிரவாதம், போதைமருந்து கடத்தல், ஹேக்கிங் உள்ளிட்டவற்றுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “பெசிகோவ் முதன்மையான பணி தொழில்நுட்ப பணியாளர்தான். இவரின் பொறுப்பு என்பது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை அங்கீகரிப்பது, தரவுகளைப் பெறுவது மட்டும்தான். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மட்டுமல்லாது பல்வேறு குற்றங்களில் பெசிகோவ் அமெரிக்க போலீஸாரால் தேடப்பட்டுவந்தார். குறிப்பாக அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார சக்திச் சட்டத்தை பெசிகோவ் மீறியுள்ளார், அங்கீகாரமற்ற பணச்சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இவரை கைது செய்ய சர்வதேச அளவில் ரெட் அலர்டை கடந்த 2022 ஏப்ரல் மாதம் அமெரிக்கா அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்தநில் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெசிகோவை கைது செய்ய முறைப்படியான கைது வாரண்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சிபிஐ, கேரள போலீஸார், அமெரிக்க போலீஸார் ஆகியோரின் இணைந்த தேடுதல் பணியால் திருவனந்தபுரத்தில் பெசிகோவ் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய யூனியனில் உள்ள லிதுனியா நாட்டைச் சேர்ந்தவர் பெசிவோக் ஆனால், வளர்ந்தது எல்லாம் ரஷியாவில்தான். இந்திய போலீஸார், கேரள போலீஸார் தன்னை தேடுகிறார்கள் எனத் தெரிந்ததும், திருவனந்தபுரத்தில் இருந்து அவசரமாக லிதுனியாவுக்கு புறப்பட பெசிகோவ் ஆயத்தமாகியபோது போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்க நீதித்துறை செய்தித்தொடர்பாளர் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் “காரன்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி அலெக்சேஜ் பெசிகோவ் அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் சிக்கிய நடிகைக்கு 17 ஏக்கர் நிலம்.. ஒதுக்கீடு செய்ததா கர்நாடகா அரசு..? சிபிஐ பிடி இறுகுகிறது..!