×
 

DELIMITATION : சீக்கிரமே நல்ல சேதி வரும்-னு நம்புகிறோம்! நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு மறு சீரமைப்பு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி தொகுதி மறு சீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39 இல் இருந்து 31 ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசவே வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்... கேள்விக்கணைகளை தொடுத்த வானதி சீனிவாசன்!!

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டிலிருந்து அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்., மேலும் இந்தக் கடிதம் உங்களை நலம் பெறச் செய்யும் என்று நம்புவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான எல்லை நிர்ணயம் குறித்த ஒரு குறிப்பாணையை முன்வைக்க, உங்களுடன் ஒரு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்வதற்காக இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 22, 2025 அன்று, நியாயமான எல்லை நிர்ணயம் குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டத்தை சென்னையில் நடத்தியதமாவும், இது இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தைத் தேடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்தப் பிரச்சினை நமது மாநிலங்களுக்கும் குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக இந்த குறிப்பாணையை முறையாக சமர்ப்பிக்க நினைப்பதாக கூறியுள்ளார்.

தங்களுடன் ஒரு சந்திப்பு நிகழ கேட்டுக்கொள்வதாகவும், தங்கள் நேரத்திற்கும் பரிசீலனைக்கும் நன்றி என்றும் விரைவில் நேர்மறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கூப்பிட்டா நாங்களும் வந்துருப்போம்... டிவிஸ்ட் அடித்த அண்ணாமலை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share