எதிர்த்தாலும், முதல்ல அமல்படுத்துவோம்..! வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை..!
வக்ஃபு மசோதா சட்டமாகியபின் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது கேரள மாநிலம்.
வக்ஃபு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்தாலும், கேரள அரசு மாநிலத்தில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் செய்தபோதிலும், இந்த வக்ஃபு மசோதா சட்டமாகியபின் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்த முதல்மாநிலம் கேரளாதான்.
வக்ஃபு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டமாகியுள்ளது. இதையடுத்து வக்ஃபு வாரியம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் வக்ஃபு வாரியத்தை அமைக்கவும், அதன் பதவிக்காலத்தை டிசம்பர் 19ம் தேதிவரை வைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: டார்கெட் முடிக்க மாட்டியா? ஆடையை அவிழ்க்க சொல்லி அத்துமீறல்.. ஊழியர்களை நாய் போல் நடத்திய அவலம்..!
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வக்ஃபு மசோதாவை தீவிரமாக எதிர்த்தன. கேரள சட்டப்பேரவை வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஒருமனதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் வக்ஃபு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியதால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
வக்ஃபு வாரியத் துறை அமைச்சர் வி. அப்துர்ரஹ்மான் கூறுகையில் “புதிய வக்ஃபு வாரியத்தை அமைப்பதற்கான பணிகள் விரைவில் முடிந்துவிடும். புதிய வாரியம் உருவாக்கப்படும். ஒருமாதத்தில் புதிய வாரிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள், அதுவரை பழைய வாரியத்தினர் தொடர்ந்து பணியை செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
புதிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே தற்போதைய வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய சட்டத்தின் கீழ் புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாரியங்கள் அவற்றின் பதவிக்காலம் முடியும் வரை தொடரலாம். ஆனால், புதிய வக்ஃபு சட்டம், 2025 இன் கீழ் பதவி ஏற்கும் புதிய உறுப்பினர்கள், அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் தொடருவார்கள் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
புதிய வக்ஃபு வாரியத்தை அமைப்பது குறித்தும், உறுப்பினர்கள் தேர்வு குறித்தும் கடந்த 4்ம்தேதி கேரள அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்தேதி மே 3ம் தேதியாகவும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 12ம் தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த ட்ரீட்மென்ட்..! நாக்கை துளைத்த டாக்டர் மீது போலீசில் புகார்..!