பேரிடர் நிதி தமிழ் நாட்டுக்கு நாமம்...ஆந்திரா உட்பட 5 மாநிலங்களுக்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.37907 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களுக்கு ரூ.1555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணமாக அறிவித்து உடனடியாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு அறிக்கை கொடுத்து இருந்தது.
இதையடுத்து புயல், வெள்ள பாதிப்புக்காக ரூ.37907 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் தற்போது வரையில் இந்த விவகாரத்தில் எந்தவித நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுடன் விஜய் உறவு இருப்பதால் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பு....அமைச்சர் தா.மோ.அன்பரசன் பகீர்
இதேப்போன்று கடந்த ஆண்டு ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554.99கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80கோடி நிதி விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேரிடர் நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது பேரிடர் நிதி ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மத்திய அரசல் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சர்ச்சை பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது கூடுதல் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 2010 முதலே மோடியை தெரியும்..! மைக்கை உடைத்த பெண்ணா இது? டெல்லி முதல்வரின் பகீர் பிளாஷ்பேக்