அழுகிய நிலையில் மீட்கப்பட்ட திமுக நிர்வாகி..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!
சேலத்தில் காணாமல் போன திமுக நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் திமுக முன்னாள் வார்டு கவுன்சிலராக இருந்தவர். கடந்த 12 ஆம் தேதி ஆறுமுகம் திடீரென காணாமல் போய் உள்ளார்.
அவரை காணவில்லை என குடும்பத்தார் ஏத்தாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து ஆறுமுகத்தை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், முருகன் கோவில் அருகே அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.
இதையும் படிங்க: குச்சி ஐஸு ச**ணுமா..? மேடையில் பச்சை பச்சையாகப் பேசிய திமுக பெண் நிர்வாகி..!
பிறகு அந்த சடலம் ஆறுமுகம் தான் என்பதை உறுதி செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடந்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன திமுக நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!