×
 

ஜல்லிக்கட்டில் ஜாதி..? திமுக அமைச்சருக்கு எதிராக கொம்பு சீவும் இயக்குநர் ப.ரஞ்சித்...தோழமையும் சுட்டாத திருமா..!

46 தனித் தொகுதி MLAக்களுக்கு சுயமரியாதை இழந்து நிற்கும் இந்த காலத்தில், உங்களது ஆதங்கத்தை துணிச்சலான முறையில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியமைக்கு பாராட்டு

ஜாதியை காரணம் காட்டி தனக்கு மாடுபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்தர் மாடுபிடிவீரர் தமிழரசன். இதனைக் கண்டித்து பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்திக்கு பகிரங்கமாவே கண்டனம் தெரிவித்துள்ளது இயக்ந்.ரஞ்சித்தின் நீலம்பண்பாட்டு மையம். 

நேற்று, மதுரை, பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை காளையர்கள் தீரமுடன் அடக்கினர். அதேபோல் வெற்றி பெற்ற காளைகள், காளையர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பல்லாயிரக்கணக்கானோர் நேரில் கண்டுகளித்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த திமுக-வின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது பறையர் சமூக மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.அமைச்சர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி பாலமேடு கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பாலமேட்டில் அனைத்து சமுதாய உறவின் முறைக்கு சொந்தமான கோயில்களில் காளைகளை மேற்படி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வது கிராம பாரம்பரிய வழக்கம். ஜல்லிக்கட்டு தொடங்கிய பின் பாலமேடு கிராம கமிட்டி சார்பாக ஏழு கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் பல வருடங்களாக பாலமேடு பறையர் சமூகத்தை சேர்ந்த பாறை கருப்பசாமி கோவில் காளையை சாதிய தீண்டாமை காரணமாக அவிழ்த்து விடப்படுவதில்லை. 

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்!

மஞ்சமலை ஆற்றில் நடைபெறும் பொதுவிழாவில் கலந்து கொள்ளவும், இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தங்கள் பறையர் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 


ஜாதிய பாகுபாடு அதிகம் பார்க்கும் திராவிட மாடல், சமூகநீதி காக்கும் அரசு என சொல்லிக் கொள்ளும் அமைச்சர் மூர்த்தி மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். வரும் தேர்தலில் இந்த அமைச்சர் தொடர்புடைய திமுக கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதில்லை என தெரிவித்தனர். இன்றைய தினம் பாலமேடு கிராமமே திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்திருந்தனரர்.  இது ஒருபுறமிருக்க தமிழரசன் என்கிற இளைஞர், மாடிபிடிக்க டோக்கன் வாங்கி வைத்து இருந்தும் தனக்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். என்னை கடுமையாகத் தாக்கினர். ஜாதிபாகுபாடு பார்க்கிறார்கள் என மீடியாக்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதனைக் கண்டித்து நீலம் பண்பாட்டு மையம்,  ''மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரண‌ம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன்  புறக்கணிக்கத்திருப்பது ஏன் ?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதைச் சொல்வதற்காவது உங்களுக்கு தைரியம் உள்ளதே... அதுவே வீரம் தான். ஏனெனில் 46 தனித் தொகுதி MLAக்களுக்கு சுயமரியாதை இழந்து நிற்கும் இந்த காலத்தில், உங்களது ஆதங்கத்தை துணிச்சலான முறையில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியமைக்கு'' என சிலர் பாராட்டும் தெரிவித்தும் வருகின்றனர். மறுபுறம் வேறு சிலரோ திமுக கூட்டணியில் இருக்கும் ''உங்க பேராசான் இதற்காவது வாய் திறப்பாரா?  இல்லை வேங்கை வயல் பிரச்சனை மாதிரி தோழமை சுட்டுதல் எனப்போய் விடுவாரா? என திருமாவளவனையும் கோர்த்து விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share