அதிமுகவில் இருந்து விலகிக் கொள்வதுதான் எடப்பாடியாருக்கு மரியாதை… சாது மிரண்ட ஓ.பி.எஸ்..!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும்; இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்
“அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும்; இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் இணைவதற்கு சாத்தியமில்லை. கட்சியில் பிரிஞ்சது பிரிஞ்சதுதான். கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை தாங்க முடியாது'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.
இதனால் ஆவேசமான ஓ.பி.எஸ், '' அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவர்கள் தவறான ஒரு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள். நாங்கள் தலைமை கழகத்தில் உட்கார்ந்து விடலாம் என்று கிளம்பி வந்தோம். எங்களை வழி மறித்து தலைமைக் கழகத்திற்கும், இந்தியன் வங்கிக்கும் ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும். எங்களை அங்கே வழிமறித்து சென்னையில் இருக்கக்கூடிய எட்டு மாவட்ட கழக செயலாளர்கள், இந்தியன் வங்கி அருகே நாங்கள் வந்த டெம்போ ட்ராவலரை தாக்கினார்கள்.
இதுதான் நடந்த உண்மை. எங்களை தாக்கிவிட்டு அவர்களாகவே மீண்டும் தலைமை கழகத்திற்குள் புகுந்து அடியாட்களை வைத்து உடைத்து விட்டு எங்கள் மீது பழிபடுகிறார்கள். இது அனைத்தும் காவல்துறையினரின் பதிவிலேயே இருக்கிறது. கட்சியில் நான் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. பிரிந்து கிடக்கக்கூடிய அதிமுக சக்திகள் இணைய வேண்டும். இணைந்தால்தான் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு எந்த காலத்தில் இருக்கக் கூடாது என்று தனது நடவடிக்கை தொடர்ந்து செய்து வருகிறார். ஒற்றை தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் நான் வெற்றி பெறுவேன் என்றுதான் அன்று தலைமைக் கழகத்தில் எங்களைப் பற்றி ஆள் வைத்து பேசினார்கள். ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அவராகவே தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை இருக்கும். இல்லை என்றால் அவர் அவமரியாதை சந்திப்பார்'' எனத் தெரிவித்தார்.
இதனால், இந்தப்பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?