×
 

கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..!

தமிழக மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் மறுத்ததாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளியேறிய பிறகு எது கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கடந்த காலங்களில் நம்பிக்கையின்மை தீர்மானத்தை பேரவையில் விவாதிக்க நேரம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பொன்முடி பேசுகிறார் என்று குறிப்பிட்டார். 

பெண்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் விதமாக பேசிய பொன்முடிக்கு எதிராகவும், பேரவை விதி 72 கீழ் மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையின்மை தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்ததாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு... சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் உறவினர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் கூறினார். எனவே அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் தவிர கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share