×
 

சட்டையை பிடித்து வம்பு இழுத்த பயணி.. ஆத்திரமடைந்த டிடிஆர்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிடிஆர் மற்றும் வட மாநில இளைஞர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு பின்னர் அதிக அளவில் பயணிகளைக் கொண்ட ரயில் நிலையம் என்றால் அது தாம்பரம் ரயில் நிலையமே. குறிப்பாக சாதாரண நாட்களிலேயே தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை.

இந்த நிலையில் பயணிகள் சிலர் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயண சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் அவ்வப்போது டிடிஆர்கள் ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

அப்படியே தாம்பரம் ரயில் நிலையத்தில் டிடிஆர் சோதனை நடத்திய போது, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டை வைத்துக்கொண்டு முதல் வகுப்பு பட்டியில் ஏறிய வடமாநில இளைஞருக்கு அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞர் அபராதம் கட்ட மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி ஹைதராபாத் போக வெறும் இரண்டு மணி நேரம்தான்.. ரயில்வே துறை சொன்ன குட் நியூஸ்..

மேலும் டிடிஆரிடம் இருந்து தப்பிப்பதற்காக வடமாநிலத்தை இளைஞர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்த மற்ற டிடிஆர்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அவர்களை தள்ளிவிட்டு ஓட முயன்றுள்ளார்.

தொடர்ந்து மற்ற பயணிகள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து டிடிஆரிடம் ஒப்படைத்தனர். அப்போது வடமாநில பயணிக்கும், டிடிஆர்-களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வட மாநில பயணி டிடிஆரின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளார்.

தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், வட மாநிலத்தை இளைஞரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். நலம் காவல் நிலையத்தில் இருவரும் சமாதானம் பேசி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share