ஆப்பிளுக்குள் மறைந்திருக்கும் ஆபத்து... உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை...!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நிறத்திற்காக தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தப்படுவது அம்பலமான நிலையில் அடுத்ததாக மெழுகு பூசிய ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நிறத்திற்காக தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தப்படுவது அம்பலமான நிலையில் அடுத்ததாக மெழுகு பூசிய ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் பெரும்பாலான கடைகளில் மிளகு மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் பழங்கள் விற்பனை செய்யப்படுவதும், அவற்றை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தேன் கனிக்கோட்டை பகுதியில் அதிக அளவில் ஊசி மூலம் ரசாயனம் கலந்த நிறமூட்டிகளை தர்பூசணிக்குள் செலுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்தது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மூலம் கண்டறிந்தனர்.
இன்று ஓசூர் மாநகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், மாநகரில் பெரும்பாலான கடைகளில் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக செயற்கையாக தயாரிக்கப்பட்ட மெழுகு பயன்படுத்தப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அனைத்து கடைகளிலுமே இது போன்று விற்பனை செய்யப்பட்டு வருவதால், இவற்றினை சாப்பிடக்கூடியவர்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜய்க்கு வைத்த வசூல் வெடிகுண்டு.. தேம்பி தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா..?
மேலும் இதில் அதிர்ச்சிகரமான காரியம் என்னவென்றால் பழங்களை விற்கக்கூடிய வியாபாரிகளுக்கே இவை மெழுகு பூசி ஆப்பிள்களா என்பது போன்ற விழிப்புணர்வு இல்லாத நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் ஓசூர் பகுதியினுடைய பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திருக்கிறது.
தர்பூசணியைத் தொடர்ந்து ஆப்பிள் பழங்களிலும் கூட இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றதா என பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பறந்து பள்ளத்தில் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்..!