×
 

பறந்து பள்ளத்தில் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்..!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் பறந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கெச்சானம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார், உன் உறவினர் பெண்ணான மீனா என்பவரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வடமதுரை வேடசந்தூர் பிரிவு அருகே சென்றுள்ளனர்.

அப்போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் அவரது மனைவியுடன் திருச்சி நோக்கி காரில் சென்றுள்ளார். பிரேம்குமார் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாகச் சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: இறப்பிலும் இணைபிரியா நண்பர்கள்.. சோகத்தில் மூழ்கிய கல்லூரி நிர்வாகம்..

தொடர்ந்து இடித்த வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மணல்மேட்டில் ஏறி, கழிவுநீர் கால்வாயை கடந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நால்வரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காருக்குள் இருந்த கணவன் மனைவியினரை மீட்டனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: டீக்கடைக்குள் புகுந்த இஸ்ரோ பேருந்து.. இருவர் பலி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share