×
 

நள்ளிரவில் வெளிவந்த அறிவிப்பு.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலனை.. அதிகாரிகளை குஷி படுத்திய தமிழக அரசு..

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் தான் அரசு ஊழியர்களை குளிர்விக்கும் வகையில் தமிழக அரசு நள்ளிரவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை பின் வருமாறு பார்க்கலாம்.

 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் பின்பற்றுவந்தது. இந்த திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து நாடு முழுவதும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை  அமல்படுத்தியது.

இதன்பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த புதிய ஓய்வூதிய திட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆட்சியிலும் அவ்வப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப் அரசு..! இந்தியா புறப்பட்டது அமெரிக்க ராணுவ விமானம்

 இந்நிலையில் தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கடந்த 2021 ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக திமுக உறுதியளித்தனர். தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பும் இந்த திட்டமானது நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதிகாரிகள் திவர போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிகாரிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தம் வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட தமிழக அரசு மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், 'கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இருப்பினும் மாநில அரசு பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசு பணியாளர்கள் 01.04.2003 க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் 24.01.2025 அன்று ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து இட ஒரு குழு அமைத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதில் மாநில அரசின் நிதிநிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த உரிய ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரையிணை அரசுக்கு அளித்திடவும் வழிவகை செய்யதுள்ளது.

அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் முன்னாள் இயக்குனர் கே.ஆர்.சண்முகம், நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தையாள் ஆகிய மூவரும் இணைந்து விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share