×
 

அரசு பள்ளியில் சத்துணவு ஊழியருக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது!

அரசுப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றும் பெண்ணுக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அரசுப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தற்போது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அப்பெண்ணின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அந்த ஆசிரியரின் நண்பரிடமும் செல்போன் எண்ணைக் கொடுத்து தொந்தரவு செய்ததாகவும், பின்னர் வீட்டுக்கே வந்து அத்துமீறல், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அப்பெண் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது நண்பர் மீது 296/b, 329/4 மற்றும் பெண் துன்புறுத்தல் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இருவர் கைது 

ஆனால், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற அந்த ஆசிரியர் மறுநாளே பள்ளிக்கு வந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறையினர் வேறு ஏதோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ததால், அவர் ஜாமீனில் வெளியே ஜாலியாக உலாவுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share