×
 

தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டம்.. ஜவுளி உற்பத்தியில் 250 கோடி loss!

தொடர்ந்து ஏழாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நெசவு தொழில் பெரும்பான்மை வகுத்திருக்கும். இம்மாட்டங்களில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிற்கும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் அரசின் வருவாயில் இந்த இரு மாவட்டங்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இந்த நிலையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் கூலி உயர்வினை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஏழாவது நாளாக விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஜவுளி துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்களின் வேலையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்.. பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வலியுறுத்தல்!

நாள் ஒன்றுக்கு 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரையில் சுமார் 250 கோடிக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி கடுமையாக முடங்கியுள்ளது.

இதனை தடுக்கும் வகையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு தரப்பில் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை முன்னிறுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share