அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!
அமெரிக்காவில் ஏராளமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராகப் மக்கள் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இருந்து ஏராளமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததற்கு எதிராக தலைநகர் வாஷிங்டன் டிசி உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் திரண்டு வந்து அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
வாஷிங்கடனில் உள்ள நினைவுரங்கத்தின் முன் ஏராளமான மக்கள் கூடி அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்கிற்கு எதிராக கோஷமிட்டபோது, திடீரென மழை கொட்டியது. ஆனால் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேசிய அரங்கை நோக்கி நடந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 20ஆயிரம் மக்கள் பங்கேற்றதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
150 சமூக அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் உள்ளிட்ட 50 மாகாணங்களில் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!
நியூ ஜெர்ஸி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பயோமெடிக்கல் ஆய்வாளர் டெர்ரி கெலின் வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த சில கொள்கைகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் அனைத்துக்கும் வரிவிதிப்பு, கல்விக்கும்கூட வரிவிதிப்பு இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்கவே தாக்குதலில் இருக்கிறது, அதாவது அரசு அமைப்புகளும் தாக்குதலில் இருக்கின்றன. இதுதான் அமெரிக்காவை கிரேட்டர் ஆக்குவதா” எனத் தெரிவித்தார்.
வாஷிங்டன் நகரின் நினைவரங்கம் முன்பு நேற்று முழுவதும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். சிலர் உக்ரைன் கொடியையும், சிலர் பாலஸ்தீனக் கொடியையும் பிடித்து போராட்டத்துக்கு வந்தனர்.
நியூஜெர்ஸியின் வெஸ்ட் கேப் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வேனே ஹாப்மேன் கூறுகையில் “அதிபர் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ஆபத்தாக இருக்கின்றன. அனைத்து நாடுகள் மீதும் வரிவிதித்துள்ளார். விவசாயிகள் பாதிக்ககப்படுவார்கள், ஏராளமானோர் வேலையிழப்பார்கள், மக்கள் 10ஆயிரத்துக்கும் மேலான டாலர்களை இழப்பார்கள்” எனத் தெ ரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியவுடன் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் ஆட்டம்கண்டன. அதிபர் ட்ரம்ப் தற்போது ப்ளோரிடாவில் ஓய்வெடுத்து வருகிறார். இவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு பாம் கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். அதிபராக 2வது முறை ட்ரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவுகளைக் குறைக்கவும், திறமையாக செயல்பட வைக்கவும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை அமைச்சரவைியல் கேபினெட் அந்தஸ்தில் பதவி அளித்தார்.
எலான் மஸ்க், அரசுக்கு செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், 2 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார். வருவாய் துறையில் இருந்த மட்டம் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர். இதனால் எலான் மஸ்க் வகிக்தும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முன் நேற்று போராட்டக்காரர்கள் திண்டு வந்து போராட்டம் நடத்தினர். மேலும் பெர்லின், பிராங்பர்ட், பாரிஸ், லண்டன் நகரங்களில் வசிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான அமெரிக்க மக்கள் அந்நாட்டில் அதிபர் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: தனிக்காட்டு ராஜா நித்யானந்தா இறந்துவிட்டார்..? உண்மையை போட்டுடைத்த சீடர்..!