×
 

துக்க வீடான திருமண வீடு.. மகள் திருமணத்தன்று பலியான தாய்.. கதறி துடித்த மணப்பெண்.. 

தஞ்சையில் மகள் திருமணத்தன்று பெற்றோர் விபத்தில் சிக்கி தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், வெட்டிக்காடு அயனாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி - மாலதி தம்பதியினரின் மகள் சுசித்ரா என்பவருக்கும் அவரது உறவினரான இளைஞர் சதீஷ்குமாருக்கும் நேற்று ஊரணி புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உற்றார், உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில், முகூர்த்த நேரம் நெருங்குவதால் ரங்கசாமியும், அவரது மனைவி மாலதியும் திருமணம் நடைபெறவிருந்த மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக குறிப்பிடுகிறது. அப்போது கலியராயன் விடுதி பிரிவு சாலை அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: டிராக்டர் - லாரி மோதி விபத்து.. இருவர் பலி: சேலத்தில் அரங்கேறிய சோகம்..!

இதில் தூக்கி வீசப்பட்ட மாலதி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த மாலதியின் கணவர் ரங்கசாமி 108 ஆம்புலன்ஸ் உதவியோடு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மாலதியின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் சுசித்ராவின் திருமணத்திற்கு பின்னர், விபத்து குறித்த செய்தியை அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சுசித்ரா மன கோளத்தில் கதறியலும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்தது.

தொடர்ந்து தந்தை ரங்கசாமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாய் மாலதியின் உடல் உடற்கூராய்விற்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பறந்து பள்ளத்தில் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share