தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலுக்கு வழிவகுக்கிறது.
இந்த நிலையில் வெப்பமானது இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என அவ்வப்போது சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஒரு சில தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்.. தவெக சார்பில் இலவச நீர், மோர் பந்தல்..!
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும். இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும். தொடர்ந்து வடகிழக்கு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசப்படும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசவுகரியம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் இயல்பை விட இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையானது உயரக்கூடும் என்றும், ஆகையால் பொதுமக்கள் வெப்பம் அதிகரிக்க கூடும் நேரங்களில் அனாவசியமாக வெயிலில் அலைய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கொளுத்தி எடுக்கும் வெயில்.. மாணவர்களுக்கு குட் நியூஸ் அளித்த பள்ளிகல்விதுறை..!