புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ஏப்.12 வரை மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம்..!
தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும்..
இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்கும் நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் வெப்பநிலை 2 டிகிரி அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
குறிப்பாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆந்திரா ஒடிசா வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு..!