×
 

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்?

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) எதிர்காலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா தனது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராக உள்ளது. இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி பயணம் அடுத்த மாதம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) பயணம் மேற்கொள்ள இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தயாராக இருக்கிறார். 1984 ஆம் ஆண்டு சோவியத் சோயுஸ் விண்கலத்தில் இந்தியாவின் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா பெயர் பெறுவார். இந்தியா தனது அடுத்த விண்வெளி மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்!

அவரை தொடர்ந்து விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன், அடுத்து செயல்படுத்த உள்ள பல்வேறு விண்வெளித் திட்டங்களின் நிலை குறித்தும் விளக்கம் அளித்தார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 1985 அக்டோபர் 10 தேதி பிறந்தவர் சுபான்ஷு. இவருக்கு தற்போது 38 வயதாகிறது. அவர் போர் விமானியாகவும் போர் விமான தலைவராகவும் உள்ளார். அவருக்கு 2000 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது.

அவர் இதுவரை SUKAI-30 MKI , MIG -21, MIG -29, Jaguar, Hawk, Dornier மற்றும் AN -32 போன்ற விமானங்களை இயக்கியுள்ளார்.  சுபான்ஷு தேசிய பாதுகாப்பு அகாடமியின் (என்.டி.ஏ) முன்னாள் மாணவர் ஆவார். அவர் 17 ஜூன் 2006 அன்று இந்திய விமானப்படையின் போர் நீரோட்டத்தில் நியமிக்கப்பட்டார். சுபான்ஷு இந்திய விமானப்படையில் பைலட் ஆவார். இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதையும் படிங்க: மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share