×
 

சூடுபிடிக்கும் ஜாகிர் உசேன் கொலை வழக்கு.. நடவடிக்கை எடுக்க தவறிய உதவி ஆணையர் சஸ்பெண்ட்..!

நெல்லையில் ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி. காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற அவர், நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்து வந்துள்ளார்.

தைக்காவில் ரம்ஜானையொட்டி நோன்பு தொழுகையை முடித்துவிட்டு, அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற ஜாகிர் உசேனை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

இதையும் படிங்க: வன்முறையின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகுது.. எச்சரித்த ஓபிஎஸ்..!

இந்த வழக்கு தொடர்பாக இருவர் போலீசாரிடம் சரணடைந்தனர். இருப்பினும் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான முகமது தெளபிக் எனும் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றும் அல்லது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜாகிர் உசேன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் முகமது தெளபிக் பதுங்கி இருந்ததை கண்டறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

இதற்கிடையே தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி ஜாகிர் உசேன் பதிவுசெய்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவ்வழக்கில் திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது உதவி காவல் ஆணையரும் பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தலைமை இயக்குநருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் பேரில் காவல் உதவி ஆணையர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கு.. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share