சென்னையில் தொடரும் பாலியல் சீண்டல்..மூவருக்கு வலைவீச்சு..போலீசாரின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநில பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது தோழியுடன் தங்கி சேலத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மாதவரத்தில் வசித்து வரும் இவரது மற்றொரு தோழிக்கு குழந்தை பிறந்தள்ளது. தோழி மற்றும் குழந்தையை காண்பதற்காக சேலத்தில் இருந்து அப்பெண் பேருந்து மார்க்கமாக சென்னை கிளாம்பாக்கம் வந்தடைந்துள்ளார். மேலும் அவர் மாதவரம் செல்வதற்காக பேருந்திற்காக இரவு 10 மணியளவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்த பெண்ணிடம் சகஜமாக பேசுவது போல் பேசி ஆட்டோவில் பயணம் செய்ய நிர்பந்தித்துள்ளார். மேலும் அப்பெண் வர மறுக்கவே, ஆட்டோவில் ஏற வற்புறுத்தியதுடன், அவரையும் அவரின் உடமைகளையும் ஆட்டோவில் ஏற்றி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள் ஆட்டோவில் ஏறியுள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை விசாரித்துக் கொண்ட பெண் அவரது தோழிக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பவே, அவரது தோழி போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உடனடியாக ஆட்டோபில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரை கண்காணித்து ஆட்டோவை பின்தொடர்ந்துள்ளனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணை மதுரவாயல் அருகே உள்ள மாதா கோவில் தெருவில் விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: சாட்ஜிபிடி, டீப் சீக் ஏஐ செயலிகளை பயன்படுத்தவேண்டாம்: நிதி அமைச்சகம் உத்தரவு
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது இரு நண்பர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்ரித்சர் வந்த நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. அமெரிக்க ராணுவ விமானத்தில் பயணம்