செந்தில் பாலாஜியால் அவர் தம்பியையே கண்டுபிடிக்க முடியல... 2 லட்சம் டன் நிலக்கரி..? கே.எஸ்.ஆர் தமாசு..!
வாங்காமல் அதை வாங்கிவிட்டதாக கணக்கில் எழுதி விட்டு இப்போது காணாமல் போய்விட்டது என்று கதையை முடித்தாயிற்று என சொல்ல கொள்ளலாமே..?
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்து இருந்தார். 2021 ஆக்ஸ்ட் 20ம் தேதி இதுகுறித்து பேசிய செந்தில் பாலாஜி ''இங்கு 2.38 லட்சம் டன் நிலக்கரி கணக்குகளில் இருந்தபோதும், இருப்பில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதில் தொடர்புடையவர்கள் மீது இருய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜியில் முந்தையை குற்றச்சாட்டை மேற்கோள்காட்டி மூத்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ்தளப்பதிவில், ''வடசென்னை அனல் மின் நிலையத்தில் வைத்திருந்த இரண்டு லட்சம் டன் நிலக்கரியை யாரோ 20000 லாரிகளில் வந்து ஏற்றி திருடி விட்டு சென்று விட்டார்கள். அவர்கள் உடனடியாக இந்த ஆண்டு இறுதிக்குள் திருடிய இடத்தில் கொண்டு வந்து அந்த நிலக்கரியை கொட்ட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
இதையும் படிங்க: லண்டனில் அண்ணாமலை எந்த மொழியில் பேசினார்? - வறுத்தெடுத்த அமைச்சர்கள்!!
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டன் நிலக்கரியை யாராவது முதலில் திருட முடியுமா? இதை திருடுவதற்கு இருபதாயிரம் லாரி தேவைப்படும். மேலும் நிலக்கரியை திருடிக் கொண்டு என்ன செய்வார்கள்? அப்படி என்றால் இதில் என்ன நடந்திருக்கும்? வாங்காமல் அதை வாங்கிவிட்டதாக கணக்கில் எழுதி விட்டு இப்போது காணாமல் போய்விட்டது என்று கதையை முடித்தாயிற்று என சொல்ல கொள்ளலாமே..?
வடசென்னை அனல் மின் நிலையத்தில் வைத்திருந்த இரண்டு லட்சம் டன் நிலக்கரியை யாரோ 20000 லாரிகளில் வந்து ஏற்றி திருடி விட்டு சென்று விட்டார்கள்... அவர்கள் உடனடியாக இந்த ஆண்டு இறுதிக்குள் திருடிய இடத்தில் கொண்டு வந்து அந்த நிலக்கரியை கொட்ட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது கடும்…
— K.S.Radhakrishnan (@KSRadhakrish) March 13, 2025
எந்தத் துறை கொடுத்தாலும் அதன் உச்சத்தை தொடும் அளவிற்கு விதவிதமாக ஊழல் செய்வதில் வல்லவர் இவர். காணாமல் போன இவர் தம்பியையே கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் எப்படி இவ்வளவு பெரிய நிலக்கரியை கண்டுபிடித்து விடுவார்? என்று இணையவாசிகள் தமாசு செய்கிறார்கள்''எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி... செந்தில் பாலாஜி ஆவேசம்....!