ஓராண்டு முதுகலை படித்தவர்களும் இனி உதவி பேராசிரியராக பணிபுரியலாம்...!
ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்களை, சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள கடந்த ஜனவரி 24 ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் உதவி பேராசியர் பணிக்கு விண்ணப்பிக்க, ஒராண்டு முதுகலை சட்டப் படிப்பை தகுதியாக கருதி முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது. முதுகலை சட்டப்படிப்பில் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணபிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆண்டாள், பிளிசன், செய்யது அன்சாரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ஜெய்பரத் மற்றும் ஒய்.கவிதா ஆஜராகி, அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஒராண்டு சட்ட முதுகலை படிப்பை முடித்தவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு, புதுப்பெண்ணுக்கு 'எச்.ஐ.வி. இஞ்செக்சன்' செலுத்திய கொடூரம்: ரூ.50 லட்சம் 'சீர் வரிசை' கொடுத்தும், ஆசை அடங்காத மாமியார்!
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதார்களிடம் ஆன் லைன் மூலம் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசின் உயர் கல்வி துறை, சட்டத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும், சம்பந்தப்பட்ட துறைகள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 13 ம் தேதி தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: 'லவ் ஜி காத்'தை தடுக்க சிறப்பு குழு: மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி ; "ஹிட்லர் கலாசாரம்" என, எதிர்க்கட்சிகள் விமர்சனம்!