×
 

நிர்வாண படத்தைக் காட்டி மிரட்டி, இன்ஜினியரிங் மாணவி கூட்டு பலாத்காரம்; 2 மாதங்களாக நீடித்த கொடூரம்; காதலன், நண்பர்களுடன் கைது 

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் காஞ்சிகச் செர்லா கிராமத்தை சன் சேர்ந்தவர் 19 வயது இன்ஜினியரிங் மாணவி பலாத்காரம் செய்த. காதலன் உட்பட அவர்களது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்

வீட்டில் விசேஷம் எனக் கூறி ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் காஞ்சிகச் செர்லா கிராமத்தை சன் சேர்ந்தவர் 19 வயது இன்ஜினியரிங் மாணவி. அந்தப் பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் உசேன் (வயது 25 ) என்ற வாலிபருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் செல்போன் உரையாடல் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று சேக் உசேன் தனது வீட்டில் ஒரு விசேஷம் நடப்பதாக கூறி அந்த மாணவியை வரவழைத்து இருக்கிறார். ஆனால் மானமே வந்து பார்த்தபோது வீட்டில் விசேஷம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அது குறித்து காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுடன் படிக்கும் மேலும் இரு மாணவர்களும் அங்கு வந்திருக்கிறார்கள்.  பின்னர்  அவர்கள் மாணவியை பலவந்தப்படுத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். 

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு மேலும் கொடுமை.. வெறும் ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்..

இந்த காட்சியை அவர்கள் படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு அந்த மாணவியை மிரட்டி தொடர்ந்து இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அளவுக்கு அந்த மாணவியை அவர்கள் சித்திரவதை செய்ததால் தனது பெற்றோர் மூலம் அந்த மாணவி நந்தி காமா போலீசில் அது குறித்து புகார் செய்தார்.

விரைந்து விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய உதவி ஆணையர் கே லதா குமாரி தலைமையில் போலீசார் காதலன் ஷேக் உசேன் மற்றும் நண்பர்கள் ஸ்கந்தன் கலி சைதா, பிரபு குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஏற்கனவே கைதான அவன் கொடூர குற்றவாளிகளுக்கு உள்ளூர் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் இருந்த தொடர்பு பற்றியும் போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதைத்தொடர்ந்து நந்தி காமம் போலீஸ் கமிஷனர் ஏ பி ஜி திலக் மற்றும் துணை கமிஷனர் கே எம் மகேஸ்வரர் ராஜு ஆகியோர் இந்த வழக்கில் நேரடியாக தலையிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சென்னையில் தொடரும் பாலியல் சீண்டல்..மூவருக்கு வலைவீச்சு..போலீசாரின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share