தஞ்சையில் களைகட்டிய மாசிமக தேரோட்டம்.. கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் வழிபாடு!
மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணி கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாசி மாதத்தில் மகா நட்சத்திரம் பௌர்ணமியும் இணைந்து வரும் தினமும் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த இந்த மாசி மாதத்தில் அனைத்து கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான மாசி மக தீர்த்தவாரி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான சக்கரபாணி கோயில், அதிவராக பெருமாள் கோயில், ராஜகோபாலசாமி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று சக்கரபாணி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கர ராஜா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவின் 124 வங்கி கணக்குகள் முடக்கம்..! சொத்துக்கள் பறிமுதல்.. நீதிமன்றம் அதிரடி..!
இதையும் படிங்க: நாம் தமிழர் தம்பிக்கு அடிச்ச "ஜாக்பாட்"..! கடுப்பில் ஒரிஜினல் கட்சிக்காரர்கள்..!