×
 

இனி சதுரகிரி மலையில் தினமும் தரிசனம்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் வழிபட தினமும் காலை 6 முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக அனுமதிக்க  உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி மலையில் அருவமாகவும் உருவமாகவும் சுந்தர மகாலிங்கனாரின் புண்ணிய ஷ்தலம் அமையப் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில்.

புண்ணிய ஸ்தலமாக வழிபாட்டில் இருந்து வந்தாலும், இந்த மலைக்குப் பின்னால் அதிபயங்கர இழப்பு கயிறு கதைகளும் அதிகமாகவே உள்ளது. காற்றாற்று வெள்ளம், வனவிலங்கு என எண்ணிப் பார்க்க முடியாத வகையில் ஏதார்ச்சியான நேரங்களில் ஏதேனும் விபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

 இதனை தடுப்பதற்கு, மலை மீது உள்ள கோவிலில் வழிபாடு செய்ய செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த வகையில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், அதனை மீறி ஒரு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு.. வாயைப் பிளந்த உலக ஆராய்ச்சியாளர்கள்..!

அதன்படி அமாவாசையான மூன்று நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மழை மீது செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து சுந்தரபாண்டியன் சடையாண்டி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் நவராத்திரியை ஒட்டி கோவிலில் பத்து நாட்கள் வழிபட மற்றும் 3 நாட்கள் இரவில் தங்க அனுமதிக்க வனத்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்த மனுவை  விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழக அரசு சார்பில் குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் இரவில் கோவிலில் தங்க அனுமதித்தால் மற்றவர்களும் அத்தகைய உரிமையைக் கூற வழிவகுக்கும் என்றும் தங்க அனுமதித்தால் சமையல் செய்ய முயற்சிக்கின்றனர் இதனால் காட்டுத்தை பரவவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களின் சிந்தனை, கருத்து வழிபாடு, நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை அரசியலமைப்பு பாதுகாக்கிறது என்றும் இந்த உரிமையில் தலையிடுவது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறும் மனுதாரரின் வாதம்  ஏற்புடையதாக உள்ளதாகவும், சதுரகிரி மலைக்கு புனித யாத்திரை செல்வது பக்தர்களுக்கு பாக்கியம் மற்றும் பெருமைக்குரிய சந்தர்ப்பமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுநலன் கருதி வனத்துறையுடன் கலந்த ஆலோசித்து நியாயமான கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை கீழ்க்கண்ட விபரங்களை உள்ளடக்கி அரைநிலையத்துறை வெளியிடும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி தினமும் பக்தர்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறையினர் சோதனை சாவடி வழியாக அனுமதிக்க வேண்டும் என்றும், தரிசனத்திற்கு பின்னர் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் பாதுகாப்பாக மலையடிவாரத்தை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோயிலில் இருந்து வெளியேறுவதை பக்தர்களின் எண்ணிக்கையை வனத்துறையினர் கணக்கிட வேண்டும் என்றும் யாரேனும் அனுமதி இன்றி மலையில் இரவில் தங்கினால் வனத்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனத்துறையினர் சோதனை சாவடியில் பக்தர்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே மழை மேல் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் எளிதல் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா!! வீட்டில் வளர்க்கபட்ட ஹைடெக் கஞ்சா..! கோவாவில் ரூ.11.5 கோடி மதிப்பில் பறிமுதல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share