வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு.. வாயைப் பிளந்த உலக ஆராய்ச்சியாளர்கள்..!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகல ஆய்வில் ஐந்தாயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையிலான அகட் கல்மணி பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த விஜய கரிசல்குளத்தில் கடந்த ஐந்தாயிரம் ஆண்டு நூல் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடக்கரையில் மேற்காடு பகுதியில் மூன்றாவது கட்ட அகழாய்வு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முன் வாழ்ந்த தமிழர்களின் அடையாளங்களாக பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அப்போது அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகளால், தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் தென்பட்டது.
இதையும் படிங்க: விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..!
தமிழ் சமூகமானது கி மு ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கி புகழ்பெற்றதை கரிம பகுப்பு ஆய்வுகளின் முடிவுகள் வாயிலாக நிலை நிறுத்தப்பட்டது. அதற்கு முந்தைய ஆய்வுகளில் மூத்த நாகரிகமும் சமூகமாக தமிழ் சமூகமே இருந்தது என்று கீழடி ஆய்வுகளின் மூலம் துல்லியமாக கண்டெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தொல்லியல் பணியானது கீழடி மற்றும் அதன் அருகில் உள்ள தொல்லியல் தளமான கொந்தகை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பத்து கட்டங்களாகவும், இரண்டாவதாக வெம்பக்கோட்டை விருதுநகர் மாவட்டம் மூன்று கட்டங்களாகவும், மூன்றாவதாக கீழ்மண்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாகவும், நான்காவதாக புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டு கட்டங்களாகவும், ஐந்தாவதாக தென்காசி மாவட்டத்தில் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சொன்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டங்களுடன் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த உதய கரைசல் குளத்தில் கடந்த ஐந்தாயிரம் ஆண்டு நுன்கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேற்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், சுடுமண் குழுவை சுடுமண் முத்திரை நுட்பமான முறையில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் கட்ட அகழாய்வு பணிகளின் போது சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி வாணிகள், வட்ட சில்லு, பழமையான கற்கள் உள்ளிட்ட 3210-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு புறம் இருக்க தற்போது நடைபெற்ற அடுத்த கட்ட அகழாய்வு பணிகளில் அகட் வகை கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் உள்ளிட்ட அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே நாகரிகம் நடைபெற்ற தமிழ் சமூகம் தொன்மையான விலைமதிப்பற்ற அகெட் போன்ற அணிகலன்களை பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!